எதிர்வரும் வருடங்களில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு!! பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி



Murshid Valaichenai-

திர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.ரி.எம்.புர்கானின் காரியாலயம் மிராவோடை மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

எதிர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் பிரமாண்டமான தோல் பதணிடும் ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

அதில் எமது பிரதேச இளைஞர்கள் அனைவருக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலையில் அரச வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். இவ்வாறான திட்டங்களை நாங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு கட்சியின் பட்டியலில் உள்ளவர்கள் வெற்றி பெற்றால் யார் தவிசாளர், உதவி தவிசாளர் என்று கட்சி செயலாளர் நியமிக்கலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடியில் சுயேட்சைக் குழுவில் களமிறங்கியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் தேசிய பட்டியல் மூலம் ஆசனம் கிடைத்தால் அவ்வாசனத்தை யாருக்கு வழங்குவதென்று சுயேட்சைக் குழுவின் தலைவருக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு. மாறாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கோ அல்லது கட்சி செயலாளருக்கோ தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை.

கல்குடா ஜம்மியத்து உலமா மற்றும் ஏனைய சமூக அமைப்புகள், பள்ளிவாயல் எல்லாவற்றையும் அழைத்து நாங்கள் சுயேட்சையாக ஓட்டகத்தில் கேட்கிறோம், இஸ்லாமிய சின்னத்தில் கேட்கிறோம் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சைக் குழுவில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மௌலவி ஒருவர் வட்ஸ்சப் குழுவில் கூறியிருந்தார்.

இவர்கள் ஏதும் சொன்னால் ஊர் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நினைத்து இவ்வாறு கூறுகின்றார்கள். இவர்கள் கட்சி சார்பாக கூறிய அருவறுப்பான கருத்துக்களை தேர்தல் முடிந்ததும் மக்களுக்கு போட்டு காட்டுவோம்.

கல்குடாப் பிரதேசத்தில் இரண்டு மையங்களான காணி மற்றும் கல்வி என்பவற்றை நிலைப்படுத்தி தேர்தலுக்கு வந்தவன். அந்த வகையில் கல்குடாப் பிரதேசத்தில் தலைமைத்துவம் இருந்த படியால் தான் பாடசாலைகளை அமைத்துக் கொடுத்து இருக்கின்றோம். ஆனால் இங்கு வேறு எந்த அரசியல் தலைமைகளும் செய்யவில்லை. உங்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதுää உங்களது வரவேண்டிய காணிகளைää கிராம சேகவர் பிரிவுகளை பெற்று எடுப்பது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபையை நாம் வெற்றி கொண்டால் இதனை பெற முடியும் என்றார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -