சம்பிக்கவை UNP யில் வைத்துக்கொண்டு இனவாதிகளுக்கு இடமில்லையென கூறுவது வேடிக்கையானது ...

னவாதிகளின் தந்தையான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை வைத்துக்கொண்டு ஐ.தே.கவில் இனவாதிகளுக்கு இடமில்லையென கூறுவதைப் போன்ற நகைச் சுவை உள்ளதா என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

தற்போது பா.உ ரஞ்சன் ராமநாயக்கவும் அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் டான் பிரசாதும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவர் தேர்தல் கேட்பாரா என்ற விடயத்தில் சந்தேகம் நிலவினாலும் குறித்த புகைப்படம் போலியானதல்ல என்பது உறுதியானது. இதே புகைப்படம் போன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியைச் சேர்ந்த யாராவாது இருந்திருந்தால் இன்று முஸ்லிம்களிடையே எப்படியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

இப் புகைப்படத்தை தொடர்ந்து முஸ்லிம்கள் பலரிடைய கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த ஐ.தே.கவைச் சேர்ந்தவர்கள், ஐ.தே.கவில் இனவாதிகளுக்கு இடமில்லை என கூறியிருந்தனர்.

இலங்கை நாட்டில் இனவாதத்தை தூபமிட்டவர்களில் முதன்மையானவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவாகும். அவர் முஸ்லிம்கள் பற்றி இல்லாத பொல்லாதவைகளை எழுதி புத்தகம் ஒன்றே வெளியிட்டிருந்தார். இப்படியான ஒருவரை தங்களுடன் வைத்துக்கொண்டு இனவாதிகளுக்கு ஐ.தே.கவில் இடமில்லை என கூறுவதைப் போன்ற நகைச்சுவை இருக்க முடியுமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இனவாதம் தலைவிரித்தாட இப்படியான சிலரே காரணமானவர்கள். அவருக்கு இனவாதி என்ற பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டு இவர்கள் கிளம்பிவிட்டார்கள். இவ்வாறான புகைப்படங்களை பார்த்து சிந்தித்து நேரிய வழியை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -