ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்டப் பொருளாளராக இருக்கும் ஏ.சி.எஹியாகான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளர் கேட்டு இன்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் அம்பாரை மாவட்டப் பொருளாளராகவும் இருக்கும் நிலையில் கட்சியுடன் கொண்ட அதிருப்தி காரமாகவும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரச்சனைகள் காரணமாகவும் பள்ளிவாயல் நிருவாகம் எடுத்த முடிவுக்கேற்ப எந்த கட்சியும் இம்முறை அங்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதனாலும் ஸ்ரீ.சு.கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த செய்தி தொடர்பாக இம்போட்மிரர் செய்திப் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.எஹியாகானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:
நான் இன்று ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றது உண்மை. ஆனால் நானாகச் செல்லவில்லை எனக்கு அழைப்பு வந்தது ஜனாதிபதியின் செயலகத்துக்கு வருமாறு அதனால் அங்கு நான் சென்றிருந்தேன்.
அங்கு அமைச்சர் பைஷர் முஸ்தபா பலரும் இருந்தனர். உங்களை சாய்ந்தமருதுக்கான பிரதம அமைப்பாளராக நியமிக்க திட்டமிட்டுள்ளோம் நீங்கள் ஆயத்தமா என்று கேட்டார்கள் ஆனால் நான் வேறு கட்சியில் முக்கிய பதவியில் இருப்பதால் என்னால் இப்போதைக்கு முடியாது.
ஆனால் இரண்டு நாட்களின் பின்னர் முடிவு சொல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பினேன் என்று தெரிவித்தார்.
