மு.இராமச்சந்திரன்-
டிக்கோயா வனராஜா வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வைரவர் தெய்வ சிலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்து 02.12.2017 வைக்கப்பட்டது.
வினாயகர் ஆலய நிர்வாக குழுவினரின் வேண்டுகோளுக்கினங்க அட்டன் டிக்கோயா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விக்கரமசிங்க அவர்களினால் 5 லட்சம் ரூபா தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட வைரவர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வைரவர் சிலை விசேட வழிபாடுகளின் பின்னர் வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ஜீ. ரணசிங்க அட்டன் டிக்கோயா நகர வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.