மாத்தறை மாவட்டம், வெலிகம நகர சபைக்காக ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிப்பு

மாத்தறை மாவட்டம், வெலிகம நகர சபைக்காக ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெலிகம நகர சபைக்காக ஸ்ரீ ல.மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 353 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இது விகிதாசாரத்தில் 3.1 ஆகும். இச்சபையில் ஸ்ரீ ல.மு.கா. சார்பில் எவரும் உறுப்பினராக தெரிவாக வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு 7 ஆசனங்களும், ஐ.தே.கட்சிக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.

இதேவேளை, திக்வெல்ல பிரதேச சபைக்காக மவ்பிம ஜனதா கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -