அலி ஷாஹிர் மௌலானா அவர்களின் அழைப்பின்பேரில் சுனில் ஹெட்டியாராச்சி ஏறாவூர் அலிகாருக்கு விஜயம்



ஏ.எச்.எம்.நிறாஸ்-

ட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் செய்யித் அலி ஷாஹிர் மௌலானா அவர்களின் அழைப்பின்பேரில் நேற்று 01.12.2017ம் திகதி அன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சுனில் ஹெட்டியாராச்சி வருகை தந்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை திறந்து வைத்தார்.

இதன் பின்னர் அதிபருடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது இதில் அலிகாரின் பல முக்கிய பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளையும் உடனடியாக பெற்றுத்தருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் அதிபருக்கு வாக்குறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய செயலாளர்
நான் பார்வையிட்ட முஸ்லீம் பாடசாலைகளில் மிகவும் நேர்த்தியான, சுற்றுச்சூழல் தூய்மையுடைய பாடசாலையாக இதனை காண்கிறேன் என்றும்,நேர்மையான, ஆளுமையுள்ள அதிபர் ஒருவர் மூலம் இப்பாடசாலை நிருவாகம் வழிநடாத்தப்படுவது மகிழ்ச்சி அழிக்கின்றது எனவும் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் க.பொ.த.சாதாரணதரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பாடப்பிரிவுகளை கொண்டுவருதல் பற்றியும் இவ்வாறான தொழில்நுட்ப பாடங்களை முதலில் ஆசிரியர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் பல பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர் பிரச்சினைகள் இருக்கின்றது ஆனால் இப்பாடசாலையின் வளர்ச்சியில் தெரிகின்றது அதிபர் ஆசிரியர்கள் பிரச்சினை அற்ற சிறந்த பாடசாலையாக விளங்குகின்றமை சந்தோசமளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பழைய மாணவர்சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுக்களின் தலையீடுகள் இல்லாத ஒரு முன்மாதிரிப்பாடசாலையாக அலிகார் இருக்கின்றது என்ற விடயத்தை
இந்நாட்டின் சகலபாகங்களுக்கும் போய்ச்சொல்வேன் என்றும் , எதிர்காலத்தில் பாடசாலையின் இடைவிலகளை தடுத்து, கணித, விஞ்ஞான, ஆங்கில , தொழில்நுட்ப , விளையாட்டுத்துறைகளை விருத்தி செய்வதோடு புதிய கல்விமுறையை தயாரித்துக்கொண்டிருக்கின்றோம் புது உலகம் படைப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் , ஓய்வு பெற்ற அதிபர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ஹெட்டியாராச்சி அவர்களுக்கு பாடசாலை அதிபரினால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -