நிப்ராஸ் மொஹமட்-
ஸ்ரீலங்கா கதீப், முஅந்தின் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார் மற்றும் அதன் காரியதர்சி மௌலவி நாகூர் அப்துர் ரஹீம் ஆகியோரது தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம அதிதியாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், சுகயீனம் காரணமாக அவருக்கு பதில் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதன்போது, காத்தான்குடி, காங்கயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த மர்ஹ{ம் றியாழ் முஅந்தினின் குடும்பத்துக்கு 5இலட்சத்து 70ஆயிரம் ரூபா உதவித் தொகை ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா கதீப், முஅந்தின் நலன்புரி அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் ஜப்பார், “நாங்கள் முன்னெடுக்கும் பல வேலைத்திட்டங்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பக்கபலமாக இருந்துள்ளார்.
அண்மையில் அவரை நாங்கள் காத்தான்குடியில் சந்தித்து அப்பகுதியில் உள்ள 44 கதீப் மற்றும் முஅத்தின்களுக்கான வருடாந்த உதவித்தொகையை வழங்குமாறு கோரினோம். இக்கட்டான நிலையிலும் ஒருவருக்கு 5400 ரூபா வீதம் 44 பேருக்குமான உதவித்தொகையை வருடா வருடம் தான் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதுடன் இவ்வருடத்துக்கான நிதியையும் உடனடியாக வழங்கி வைத்தார். அத்துடன், தான் மரணித்த பின்பு அந்த உதவித் தொகையை தனது மகன் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் வழங்குவார் என்றும் குறிப்பிட்டார்.” என்றார்.


