பாலைநகர் மீள்குடியேற்ற கிராம சென் அஃனன்ட் முன்பள்ளி விழா - சீரெப்


ட்டக்களப்பு மாவட்ட பாலைநகர் மீள்குடியேற்ற கிராம சென் அஃனன்ட் முன்பள்ளியின் 12வது மாணவர் வெளியேற்று நிகழ்வு இன்று 2017.12.02ம் திகதி இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக ஈகார்ட்ஸ் நிறுவன நிரைவேற்று பணிப்பாளர் ஜுனைட் நளீமி கலந்து கொண்டதுடன் ஆர்பிகோ நிறுவன மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டனர்.

மிகவும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்கள் கொண்ட இக்கிராமத்தின் மக்கள் கல்விரீதியான சவால்களை எதிர்கொள்வதுடன் ஆளுமையுள்ள குழந்தைகள் இப்பிரதேசத்தில் காணப்படுவதனை நடந்தேறிய நிகழ்ச்சிகள் மூலம் அவதானிக்க முடிகின்றது. நகர்ப்புற முன்பள்ளி நிகழ்வுகளை விட குறுகிய வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டதுடன், பாரிய செலவினங்களை பெறறார்கள் மீது சுமத்தாமல் எளிமையான முறையில் அழகாக நிகழ்வு வடிவமைக்கப்பட்டது பிரதேசத்தின் முன்னுதாரணமாக கொல்லப்படவேண்டிய அம்சமாகும். 
 
தளபாடங்கள் கற்றல் உபகரணங்கள், கழிவறை வசதிகள் என பல குறைபாடுகளை கொண்டபோதிலும் திறமை மிக்க மாணவர்களை இம்முன்பள்ளி உருவாக்கிவருவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -