பாடசாலை லீவு என்றால்
பள்ளியிலும் ஆட்கள் குறைவு
வீடு வாசல் மூடியிருக்கு
விடியற் காலையிலே
விடுமுறை கொடுப்பதால்
வீடுகளில் முறை மாறி
சுடும் வெயில் சூட்டில்தான்
சுபஹ் என்பது சரிதானா?
பாண் வாங்க பனிஸ் வாங்க
பதறி எழும்பி ஓடுவது போல்
ஏன் சில பேர் சுபஹ் தொழ
எழும்பி ஓட முனைவதில்லை
இடைக்கிடை ஜமாஅத் தவற
இருக்கலாம் நியாயங்கள்
ஸ்கூல் லீவு முழு நாளும்
எப்படித் தவறுகிறது
போயா தினம் வந்தால்
பொது விடு முறை வந்தால்
மாயமாய் சிலர் சுபஹில்
மறைவார் பள்ளி சப்பில்.
தொழுவதற்காய் எழும்புவதா
எழுந்ததற்காய் தொழுவதா
வழி காட்டும் இஸ்லாத்தின்
வாழ்க்கை முறையென்ன?
இறைவனைத் தொழுவதற்காய்
எழும்பிப் பழகியவர்
என்றும் எழும்புவார்
ஈமானின் சுவை அறிவார்