எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை-
கல்முனை மாநகரை தனது சுயலாபத்துக்காக பிச்சைக்காரியின் சேலைபோன்று வைத்திருக்க விரும்பும் தலைவனும், அந்த தலைவனின் மனம்கோணினால் எங்கே நமக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என்று பயந்து அவரோடு பயணிக்கும் கல்முனையின் அரை மந்திரியும், சாய்ந்தமருதுக்கு தனி சபை தருவோம் என்றுகூறி 40 தடவைக்குமேல் கொழும்புக்கு அழைத்துச் சென்று வெறுங்கையோடு அனுப்பிவைத்தார்கள்.
அந்த நேரம் சாய்ந்தமருது ப.நிர்வாகம் அவர்களின் சதியை புரிந்து கொள்ளாமல் வெழுத்ததெல்லாம் பால்தான் என்று என்னிக்கொண்டு அவர்கள் பின்னாலயே அலைந்து திரிந்தார்கள். போதாக்குறைக்கு பிரதமர் ரணிலையும் கல்முனைக்கு அழைத்துவந்து பகிரங்க மேடையிலே வைத்து சாய்.பி.சபை தருவோம் என்று கூறவும் வைத்தார்கள்.
கடைசியாக நடந்த சாய்ந்தமருது அபிவிருத்தி கூட்டத்தில் கல்முனையின் அரை மந்திரி அவர்கள் சாய்.பி.சபை கூடியசீக்கிரம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டியிருந்தார். அதுமட்டுமல்ல சாய்.பி.சபைக்காக மாநகரசபை, மாகாணசபையின் சம்மதக்கடிதங்களையும் பெற்றும் கொடுத்திருந்தார்.
இப்படியெல்லாம் செயல்பட்ட கல்முனையின் அரை மந்திரி அவர்கள் சபை கிடைப்பற்கான கடைசிநேரத்தில்தான், கொழும்பிலே வைத்து சாய்.ப.நிர்வாகத்துக்கு முன்னாலேயே "அடைந்தால் மகாதேவி அடையாது விட்டால் மரணதேவி" என்பது போல் பிரித்தால் நான்காக பிரிக்கவேண்டும் அப்படி முடியாது விட்டால் எதையும் பிரிக்க முடியாது என்று கூறியது மட்டுமல்ல, எனது மையத்துக்மேல்தான் அப்படி நடக்கமுடியும் என்றும் மிகத்தெளிவாகவே கூறியுள்ளார்.
அப்போதுதான் சாய்.ப.நிர்வாகத்தினருக்கு தலைசுற்ற ஆரம்பித்துள்ளது. அதன் பிற்பாடுதான் நாம் இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்ற உண்மை புரிந்துள்ளது. உண்மையிலேயே நான்காக பிரிக்கும் என்னம் அரைமந்திரிக்கும் சாணக்கியத்துக்கும் முன்னமே இருந்திருக்குமேயானால் ஆரம்பத்திலேயே இதனை தெளிவாக எடுத்துக்கூறி இந்தப்பிரச்சினைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் சாய். மக்களை ஏமாற்றி காரியத்தை சாதித்து விடலாம் என்று நினைத்துத்தான் இப்படித் தொடர்ந்தும் ஏமாற்றி வந்துள்ளார்கள். அவர்கள் கடைசிவரையும் நினைக்கவில்லை பி.சபை விடயம் இப்படி விரைவாக முடிவுக்கு வருமென்று.
இந்த திட்டங்களை அறியாத பைசர் முஸ்தபா இந்த சபையை கொடுக்கமுற்பட்டபோதுதான் இவர்களின் நாடகத்தை தொடர்ந்து செல்ல முடியாத நிலையில்தான் தங்களுடைய வேசத்தை கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதன் பின்தான் ஆட்டமே ஆரம்பமாகி படம் ஓடிக்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் சாய்ந்தமருது மக்கள் அரசியல் ரீதியாக பிரிந்து சுயேற்சையாக களம்காண முயற்ச்சிக்கின்ற போதுதான், இவர்களும் தங்களது ஆதரவாளர்களை களத்தில் இறக்கி சுயேற்சை குழுவுக்கு ஊசிபோட எத்தனைக்கின்றார்கள்.
சாய்.மருது மக்கள்,.. தங்களால் ஏமாற்றப்பட்டதற்கோ, அல்லது அவர்களின் கோரிக்கைக்கோ எந்தவித பதிலையும் தெரிவிக்காமல், தேர்தலில் அவர்கள் களம்காண முயற்ச்சிப்பது மேலும் பிரச்சினைகளை தூண்டுவதாகவே இருக்கின்றது எனலாம். இதன் செயல்பாடு சாய்.மக்களை இன்னும் மடையனாக்கலாம் என்ற அவர்களின் அடிமனதின் என்னமேயாகும். இதற்கு சாய். மக்கள் பதிலடி கொடுக்காது விட்டால், அவர்களின் கோரிக்கை புஷ்வானமாக மாறுவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் பெருத்த அவமானத்தையும் சந்திக்கநேரிடும் என்பதே உண்மையாகும்.
உள்ளுக்குள் ஒரு என்னத்தை வைத்துக்கொண்டு அரசியல் நாடகமாடிய இந்த அரசியல் வியாபாரிகளைத்தான் இந்த இடத்தில் நாம் கோபிக்கவேண்டும். மாறாக ஏமாற்றப்பட்டவன் கொதித்தெழும்பும் போது அவர்களை நாம் குறைகூறுவது மேலும் பிரச்சினைகளை வலுவாக்கலாம்.
ஆகவே... சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு ஆபத்து என்று இப்போது கூறும் இந்த அரசியல்வாதிகளின் மண்டைக்குள் மூளைக்கு பதிலாக களிமண்ணா இருந்தது என்று கல்முனை மக்கள் கேள்வி கேட்பது மட்டுமல்ல, இப்படியான மாங்காய் மடையர்களுக்கும், அவர்களுடைய கட்சிக்கும் எதிராகவும் இத் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.
இல்லாது விட்டால் இதைவிட மோசமான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் என்பதே எங்களின் கருத்தாகும்...!
