கடந்த வாரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினார்கள். அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாலருமான எம். திலகராஜா, மாகாணசபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், தேசிய அமைப்பாளர் ஜீ. நகுலேஸ்வரன், இளைஞர் அணி தலைவர் பா. சிவனேசன் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்த கொண்டனர்.