கந்தளாய் பேராறு பகுதியில் இரண்டு வீதிகளை புனரமைக்க நிதியொதுக்கீடு.


எப்.முபாரக்-

2017-12-06. திருகோணமலை கந்தளாய் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.கே.சுபார் கான் அவர்களின் வேண்டுதளுக்கமைய பேராறு அர்ரவூப் வித்தியாலயத்தின் வீதியும்,பேராறு நளீம் டைலர் வீதியும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும் கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இனை தலைவருமான வைத்தியர் அருண சிறிசேனவின் ஏற்பாட்டில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அர்களின் வழிகாட்டளுக்கமைய செயல்படுத்தப்படும்,

 உள்வீதிகளின் இரண்டும் நாற்பது மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் என்.எம்.கே.சுபார்கான் தெரிவித்தார். இவ்வீதிகள் இரண்டும் நீண்ட காலமாக புனரமைக்கப் படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பிரதேச மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய புனரமைக்கப்படவுள்ளது. இவ்வீதிகள் இரண்டும் புனரமைக்கப்படும் பட்சத்தில் அதிகமான பொது மக்கள் நன்மையடைவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -