வகவ 44 வது கவியரங்கம்0( 3.12.2017) இராஜம் புஷ்பவனம் அரங்கு - திருமதி வசந்தி தயாபரன் விசேட அதிதி




சிறப்பான ஒரு பெண் ஆளுமையை இன்று வகவம் நினைவு கூர்ந்துள்ளது. அதற்காக வகவத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பெண்கள் எழுத வெளிவராத காலத்தில் எழுத துணிந்தவர். ஓர் எழுத்தாளராக, கவிஞராக, ஓவியராக, நாடக ஆசிரியராக, நாடக கலைஞராக, வானொலி கலைஞராக, மொழி பெயர்பாளராக தன் முத்திரையைப் பதித்தவர் இராஜம் புஷ்பவனம் அவர்கள்.”

வலம்புரி கவிதா வட்டத்தின் 44 வது கவியரங்கம் அண்மையில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் இராஜம் புஷ்பவனம் அரங்கில் நடைபெற்றபோது விசேட அதிதியாக கலந்து கொண்ட பிரபல பேச்சாளரும், எழுத்தாளருமான திருமதி வசந்தி தயாபரன் குறிப்பிட்டார் . மேலும் உரையாற்றிய வசந்தி தயாபரன் “அதுமட்டுமல்ல கேலி சித்திரம் வரைவதிலும் கை தேர்ந்தவராக திகழ்ந்தார். இன்று போல் எழுத்தாளர்களுடன் நேரில் சந்தித்து பரஸ்பரம் கருத்து பரிமாறிக் கொள்ள முடியாத காலத்தில் இலக்கியம் படைத்தவர் அதே நேரம் தனது வீட்டுப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றியவர். ஒரு மகளாக, தாயாக, சகோதரியாக அத்தனைப் பொறுப்புகளையும் சரியாக செய்தவர். அவருக்கு வழங்கப்பட்ட“பல்கலைச் செல்வி” என்ற பட்டம் சாலப் பொருத்தமானதே. இலங்கை வானொலி மாணவர் மன்றத்திலே எம்.கே. ராகுலன், தில்லை நடராஜா, பீ.எச். அப்துல் ஹமீத் ஆகியோருடன் இராஜம் புஷ்பவனமும் எனது தந்தை ராசையா மாஸ்டரின் வழிகாட்டலிலே பயிற்சிப் பெற்றவர். அவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்தவர். கொழும்பில் பண்டாரநாயக்க மாவத்தையில் வசித்தார். லடீஸ் வீரமணியிடம் முறையாக வில்லிசைப் படித்து வில்லுப் பாட்டுப் பாடுவதிலும் திறமை காட்டினார். “வில் பிறந்த கதை” எனும் நூலினையும் வெளியிட்டுள்ளார். இத்தகு ஆளுமைப் பொருந்திய இராஜம் புஷ்பவனம் எனும் பெருந்தகையை இளைய தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்து வைக்கவேண்டும்” என்றார்;

கலந்து சிறப்பித்தார். வரவேற்புரையை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்த்த கவிஞர் ஈழகணேஷ் நன்றியுரை வழங்கினார். அண்மையில் மறைந்த கவிஞர் எம். ஏ. எம். ஆறுமுகம் அவர்களின் மாமியார் நினைவு கூரப்பட்டார்.

கவிதாயினி அட்டாளச்சேனை சுதர்ஸனி பொன்னையாவின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் கலைவாதி கலீல், கலையன்பன் ரபீக், எம். பாலகிருஸ்ணன், எம். பிரேம்ராஜ், வை. சுசீலா, பஸ்யால பாத்திமா இஸ்மத், மஸீதா அன்சார், தாஜ்மஹான், அலி அக்பர், எஸ். தனபாலன், வதிரி சீ. ரவீந்திரன், மலாய் கவிதை துவான் ரபாய், ஜொயெல் ஜோன்ஸன், கவிக்கமல் ரஸீம், எம். வஸீர், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், ஆயிஷா சித்தீக்கா பைரூஸ், பாணந்துறை நிஸ்வான், பொகவந்தலாவ எஸ். ஆனந்தராஜ், வெலிமடை ஜஹாங்கீர், அட்டாளச்சேனை ரிஸ்லி சம்சாட், இளநெஞ்சன் முர்ஷிதீன், அப்துல் அஸீஸ், கம்மல்துறை இக்பால், ஆஷிகா ராஹிலா ஹலாம், ஆகியோர் கவிதை பொழிந்தனர்.

மேமன்கவி இராஜம் புஷ்பவனம் அவர்களின்; கவிதையினை தனது நடையில் வாசித்தார்.

காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன், சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, ஸ்தாபகத் தலைவர் தாசிம் அகமது, மு. தயாபரன், ரவூப் ஹஸீர், த.மணி, கலைக்கமல், ஸவால் அஹமத், ஏ.எம்.எஸ். உதுமான், கமருன்னிஸா ரபீக் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -