கிண்ணியாவில் தேசிய வாசிப்பு மாதம் - 2017 – பரிசளிப்புவிழா -படங்கள்.


ஹஸ்பர் ஏ ஹலீம்-
தேசிய வாசிப்பு மாதம் - 2017 இற்கான பரிசளிப்புவிழா நேற்று(07) கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் தலைமையில் கிண்ணியா பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் “சிந்தனைப் புரட்சியின் ஆரம்பம் வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்றது. இதற்காக வாசகர் ஊர்வலம், நூலக சிரமதானம் மற்றும் இலக்கியவாதிகள், மாணவர்கள், நகரசபை ஊழியர்கள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள் ஆகியோருக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்றது. இவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் பிரதம விருந்தினராக பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் . எஸ் சுதாகரன் கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம். எம்.அஜீத், கிண்ணியா பிரதேச சபையின் செயலாளர் திரு. அஸ்வத்கான், உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ஹஸன், சூறா சபைத் தலைவர் அஷ்செய்க் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா (நளீமி), அதிபர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பஸீர், இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் நகர சபை அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் பாயிஸ், நூலகர்கள், அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடைகளை அலங்கரித்தன

இதில் கிண்ணியா நகரசபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான என்.எம்.நௌபீஸ் தலைமையுரையாற்றியதுடன் அதில் வாசகர்களினதும், மாணவர்களினதும் நலன்கருதி புதியவகைப் புத்தகங்களும், மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தினை உள்ளடக்கிய வகையிலான புத்தகங்களும் கொள்வனவு செய்வதற்காக இவ்வருடம் நகரசபையினால் ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், 2018ம் ஆண்டிலும் ஒரு இலட்சம் ரூபா நிதி ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறினார்.

மேலும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ் .சுதாகரன் அவர்கள் உரையாற்றுகையில் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் ஆசிய மன்றத்திடம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாசிகசாலைப் புத்தகங்கள் கோரியுள்ளதாகவும் அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -