நாடளாவிய ரீதியில் 5116 மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை நடாத்தப்பட்டது.
புதிய, பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் 514200 பேரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 174373 பேரும் இப்பரீட்சைக்குத் தோற்றவிருந்ததாகவும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, இப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் அறிவித்துள்ளார்.
