பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது அகவையினை முன்னிட்டு பாரதி விழா







க.கிஷாந்தன்-

த்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது அகவையினை முன்னிட்டு பாரதி விழா நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர்கள் ஏற்பாடு செய்த இவ்விழாவினை கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பிரதம விருந்தினர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் போட்டியில் வெற்றிப்பெற்ற ஆசிரிய பயிலுனர்களுக்கும் கௌரவிப்புகள் இடம்பெற்றது.

இவ்விழாவில் அதிதிகளாக ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலாநிதி. பொன். சிங்கரட்ணம், அட்டன் கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் (தமிழ் மொழி) திரு.கணபதிபிள்ளை, கல்லூரியின் உப பீடாதிபதிகள், துணைத்தலைவர்கள், இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -