அம்பிடியே சுமந்திரதேரர் கலவரங்களை உண்டு பண்ணிய காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது -வாழைச்சேனை நீதிமன்ற தீர்ப்பு

மீராவோடையில் பொது மக்களுக்கு சொந்தமான காணியை மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்கு சொந்தமானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அந்தக் காணி பொது மக்களுக்குறியது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தக் காணியை பொதுமக்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக கூறி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் படி இது பொதுமக்களுக்குரிய குடியிருப்பு காணி என்று தீர்ப்பு கிடைத்துள்ளதாக காணிக்குரிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு அருகில் உள்ள காணி பாடசாலைக்குரிய காணி என்று பாடசாலை நிர்வாகமும், பெற்றோரும் வாதிட்ட போது, இது எங்களது குடியிருப்பு காணி என்று அப்பகுதி எட்டு முஸ்லிம் குடும்பங்கள் வாதிட்டு வந்தனர்.

இக்காணிப் பிரச்சனை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 18ம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதியும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் போராட்டங்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கலவரங்களும் இடம்பெற்றிருந்தன. 

இதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் காணித் தகராறுகள் தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் படி விசாரணைகள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி குறித்த காணியை பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெரண

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -