சாய்ந்தமருதில் மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் இளைஞர் மாநாடும்!












எம்.வை.அமீர் -- யூ.கே. காலித்தீன்-

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு வடிவமாக இன்று (11) மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டமும் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள "மக்கள் பணிமனையில்" இளைஞர்களுக்கான மாநாடும் உள்ளுராட்சி மன்றத்தை நோக்கிய பயனத்திம் முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வில் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. பீர்முஹம்மட், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். தில்சாத் ஆகியோர் உரையாற்றினார்.

இறுதியில், இளைஞர்களும் பொதுமக்களும் கைகோர்த்து, சாய்ந்தமருது நகர மத்தியில் பாரிய மனிதசங்கிலிப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -