சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி நுணாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

நேற்றிரவு(26) 8 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ் (30) நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார் (26) ஆகிய இருவருமே உயிரிழந்தனா்.


விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த போது இருவரும் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -