எம்.ஜே.எம்.சஜீத்-
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று (18) அக்கரைப்பற்று அஸ்- ஸிறாஜ் வித்தியாலயத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையில் நடை பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபதி கபில ஜெசேகர, அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபதி நுவன் விஜயசேகர, அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் விஜய சேகர,அக்கரைப்பற்று, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிறி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.அதிசயராஜ், மற்றும்
மத தலைவர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.



