ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம்,
பிரதி அமைச்சர் அமீர் அலியினால் காணி,மீள்குடியேற்றம்,பிரதேச எல்லை நிர்ணயம்,மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவினால் முன்மொழிவானது 10.11.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள்,முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய குழுவிடம் சமர்பிக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் அமீர் அலியின் காணி,மீள்குடியேற்றம்,பிரதேச எல்லை நிர்ணயம்,மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழுவில் உள்ள அங்கத்தவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டன. குறித்த முன்மொழிவானது கோறளைப்பற்ரு மேற்கு பிரதேச செயலகத்தின் உதவிதிட்டமிடல் பணிப்பாளர், ஜனாப் எச்.எம்.எம் றுவைத்தின் தலமையில் சட்டத்தரணி ஷஹாப்தீன், சாட்டோ,வை.எல்.மன்சூர், எம்.எச்.எம்.ஹக்கீம்.ஆசிரியர், கூட்றவு அத்தியட்சகர் பாரூக், எம்.எல்.எம்.ஹலீம்.ஆசிரியர், காவத்தமுனை ஜஃபர், ,மீராவோடை சித்தீக் ஹாஜியார் ஆகியோர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன.
பிரதி அமைச்சர் அமீர் அலியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்பிக்கப்பட்ட முக்கிய விடயமாக மட்டக்களப்பு மாவட்ட மூன்று தேர்தல் தொகுதிகளையும், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும், 345 கிமார சேவர்கர் பிரிவுகளையும் கொண்டதாகும், அதில் 588.202 சனத்தொகையையும் 375906 வாக்களர்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது..
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் தேர்தல் தொகுதி ரீதியாக நோக்கும் பொழுது… தேர்தல் தொகுதிகளான கல்குடா தொகுதியானது 173591 சனத்தொகையையும், 108625 பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும், மட்டக்களப்பு தொகுதியானது 275659 சனத்தொகையையும், 177565 பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும், பட்டிருப்பு தொகுதியானது 139341 சனத்தொகையையும், 89716 பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும், மொத்தமாக 588202 சனத்தொகையையும், 375905 பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 6 மாகாண சபை தேர்தல் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைய பெறும் தொகுதிகள் பின்வருமாறு அமைய பெற வேண்டும்.
கல்குடா தேர்தல் தொகுதி 2 மாகாண சபை தேர்தல் தொகுதிகளாகவும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி 3 மாகாண சபை தேர்தல் தொகுதிகளாகவும் பட்டிருப்பு தொகுதி 1 மாகாண சபை தொகுதியாகவும் மொத்தமாக 6 மாகாண சபை தேர்தல் தொகுதிகளாகவும்,அமைய பெற வேண்டும் என்பதே சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவாகும்.
குறித்த பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய குழுவினால் சமர்ப்பிக்கப்பட முன்மொழிவு சம்பந்தமாக சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கும் கருத்துக்களுடன் நிகழ்வில் இடம் பெற்ற புகைப்படங்கள், சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடங்கலான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.





