மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆளும் எதிர்க்கட்சியினர் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் தேர்தல் குறித்து நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்பட்டு வந்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து நாளை (27ஆம் திகதி) அறிவித்தல் ஒன்றை விடுக்கவும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தயாராக இருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் வரையில் சென்றுள்ள சில சிக்கல்களை அடுத்து தேர்தல் நடத்துவதில் தடைகளும் ஏற்பட்டுள்ளன.
இதனை அடிப்படையாக வைத்து வழமைபோலவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறைகூற ஆரம்பித்துள்ளன. திட்டமிட்டே அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருவதாக கூறுகின்றனர். அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை திட்டமிட்டு பிற்போட தயாராக இல்லை. மக்களின் ஜனநாயகம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதை நாம் முழுமையாக ஏற்றுகொண்டுள்ளோம்.
எனினும் முன்னைய ஆட்சிக் காலத்தில் தேர்தல் முறைமை மாற்றப்பட்டது. எல்லை நிர்ணய முறைமைகளில் நிலவிய சிக்கல்கள் மிகவும் மோசமான வகையில் அமைந்தது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லை நிர்ணயம் குறித்து சரியான முறைமையினை கையாள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லை நிர்ணயங்களை முன்னெடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சரியாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். அதற்காகவே நாம் காலத்தை பெற்றுக்கொண்டு பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றோம். இன்று இலங்கை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பின்னடைவை சந்தித்து வருகின்றது.
ஆகவே நாட்டின் பொருளாதரத்தை சரியாக நிலைநிறுத்தவும், அரசாங்கத்தை பலப்படுத்தவும் சரியான வேலைத்திட்டங்கள் அவசியம். அவசரமாக தேர்தல்களை நடத்தி நாட்டினை சிதைவடைய இடமளிக்க முடியாது. புதிய தேர்தல் முறைமைக்கு அமைய பிரதேச சபைகளுக்கு உரிய சரியான தலைமைத்துவம் கிடைப்பதையடுத்து நாட்டினை பலப்படுத்த முடியும். எந்தக் காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட நாம் தயாராக இல்லை.
ஜாதிக ஹெல உறுமையவின் நிலைப்பாட்டினை நாம் அரசாங்கத்தில் தெரிவித்துள்ளோம். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாமும் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாதிக ஹெல உறுமையவின் நிலைப்பாட்டினை நாம் அரசாங்கத்தில் தெரிவித்துள்ளோம். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாமும் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
