பிரிட்டனின் பிரதமர் தெரசா மேயிற்கு தனது இராஜினாமா தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
விடுமுறை கால பயணமொன்றை மேற்கொண்டு இவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். அங்கு, அந்நாட்டு பிரதமர் உட்பட, பல தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் நாட்டிற்கு முன்கூட்டியே அறிவித்திருக்க வில்லையென குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு, பிரிட்டனில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, பிரீத்தியை, ராஜினாமா செய்யுமாறு வலியுறுள்ளன. இதனையடுத்தே, அமைச்சர் பதவியை பிரீத்தி ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது இராஜினாமா தொடர்பில், பிரதமர் தெரசா மேக்கு அனுப்பியள்ள கடிதத்தில், ‘என் நடவடிக்கைகளால், அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, மன்னிப்பு கேட்கிறேன். தவறுக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என கூறியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.