கிழக்கு மாகாணத்தில் அதி சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளை நேற்று (16) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துறையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும்,சுற்றுலாத்துறையினரின் வருகையை அதிகரிக்கும் விதத்திலும் திருகோணமலையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் மட்டக்களப்பிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம்,கொழும்பு மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அதி சொகுசு பஸ் சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கிழக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களை விடவும் முன்னோடியாக விழங் வேண்டும். அத்துடன்
கல்வி.தொழினுட்பம்,விவசாயம்,மீன் பிடி என அனைத்து துறைகளிலும் கிழக்கு மாகாணம் முன்னேற்றமடைந்து வருவதையே நான் எதிர்பார்க்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தின் சகல வளர்ச்சிக்கும் தங்களுடைய ஒத்துழைப்பு தேவையெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம கேட்டுக்கொண்டார்.