வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷரீப் பதவியேற்பு

பாறுக் ஷிஹான்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்.

வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று(7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக் கடிதத்தை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டு கன்னியுரை ஆற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -