அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமொன்றினை நிர்மாணிக்களவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துறையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்று (17) ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருகோணமலையில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு,மகாநாட்டு மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியதான நகர அபிவிருத்தி தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கலந்துறையாடலில் ஆராயப்பட்து.
இந்நிகழ்வில் சிங்கப்பூர் நிறுவனமான சுபர்ணா ஜூராங் நிறுவனத்தைச்சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாகாண சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் திருகோணமலை நகரத்தினை ஓர் அபிவிருத்தி அடைந்த வளர்ச்சி பிரதேசமாக மாற்றி உல்சலாசப்பிரயாணத்துறை மற்றும் கைத்தொழில் முதலீடுகளை ஊக்குவித்து அபிவிருத்தியை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்தார்.