அட்டாளைச்சேனை தொடக்கம் மருதமுனை வரை சுனாமி பதட்டம் பாடசாலைகளில் மாணவர்கள் நேரகாலத்துடன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இன்று காலை சுனாமி என வெளியான சமூக வலையத்தள செய்திகளைத் தொடர்ந்து மக்கள் பீதியுடன் பாடசாலைக்குச் சென்ற தங்களின் பிள்ளைகளை அழைக்க ஓடோடிச் சென்றனர். வீதி எங்கும் மக்கள் மாணவர்கள் பீதியுடன் அழத்தொடங்கி விட்டனர்.
பாடசாலை அதிபர் ஒருவரை இம்போட்மிரர் செய்திப் பிரிவு
அழைத்துக் கேட்டபோது அங்கு மாணவர்களின் அழுகுரல் கேட்டது. சுனாமி என்ற அச்சத்தில் மாணவர்கள் பாடசாலையில் அழத்தொடங்கி விட்டனர். என்பதனால் உடனடியாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைத்ததாக அதிபர் தெரிவித்தார்.
ஆனால் செய்தியாளர் தெரிவிக்கையில்:
சுனாமி பயம் வேண்டாம்
======================
சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாக சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய இடங்களிலுள்ள கிணற்றுநீர் வற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை காரணம்காட்டி மக்கள் பீதியில் உள்ளனர்.
சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைகள் கலலைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையிலும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியாவில் 4.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் வந்துள்ளது. இருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த நிவாரண நிலையம் அறிவித்துள்ளது. சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் கடல் இயல்புநிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் அவதான நிலையம் வழங்கியிருக்கும் தகவல்:
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட எந்த பகுதியிலும் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
