சம்பிக்க ரணவக்கவின் “ அல் ஜிஹாத் அல் கைதா” நூலிலிருந்து , பாகம் - 1 .

ஏ எம் எம் முஸம்மில்  (BA Hons)-பதுளை-

முஸ்லிம்களின் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளால் உருவாக்கப் பட்ட நல்லாட்சி அரசின் பிரதமரை இயக்கும் தீர்மான சக்தியாக இயங்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களின் முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாடு அவர் கைப்பட எழுதிய “ அல் ஜிஹாத் அல் கைதா” எனும் நூலிலிருந்து. பக்கம் 263, .

முஸ்லிம்கள் இலங்கையை அந்நியவர்களுக்கு காட்டிக் கொடுத்தர்வர்கள் சிங்கள மன்னர்களுக்கு எதிராக அந்நியவர்களுடன் சேர்ந்து போர் தொடுத்தவர்கள்.......!

இலங்கையை போர்த்துக் கேயர் ஆட்சி செய்த காலத்தில் போர்த்துக்கலுக்கும்மு ஸ்லிம்களுக்கு மிடையில் 1517ம் ஆண்டில் சண்டை மூண்டது. இந்த சண்டையை சமாதானம் செய்ய சென்றவர் அப்போதைய கோட்டை மன்னனான தர்ம பராக்கிரமபாஹு வாகும். பிறகு கோட்டை மன்னன் தர்ம பராக்கிரம பாஹுவிட்கும் போர்துக்களுக்குமிடையில் யுத்தம் மூண்டது. “முஸ்லிம்களின் கோள் மூட்டல் காரணத்தால் தான் சிங்கள அரசன் தம்முடன் போர்தொடுக்க வந்தான்” என்று போர்த்துக்கல் கூறுகின்றார்கள்.

இதன் பின் கொழும்பிலிருந்த முஸ்லிம்களை போர்த்துக்கேயர் விரட்டியடித்தார்கள். கொழும்பிலிருந்து விரட்டப் பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள மன்னர்கள் தஞ்சம் கொடுத்தார்கள்.

ஆனால் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்கள் நாட்டு பற்று இல்லாதவர்களாகவே இருந்து வந்தார்கள். போர்த்துக் கேயாரின் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களை பாதுகாத்த செனரத் அரசன் போர்த்துக்கேயாருக்கு எதிராக போராட முஸ்லிம்களை அழைத்தார். ஆனால் அப்போது 4000 பேராக இருந்த முஸ்லிம்களில் 1500 பேர் மட்டுமே போராட முன் வந்தார்கள். ஆகவே முஸ்லிம்கள் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள் . ஆனால் மன்னனுக்கு நன்றிக் கடன் செலுத்த முன்வரவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு கண்டி இராச்சியம் பற்றிய அரச இரகசியங்களை மற்றும் முக்கிய தகவல்களை காட்டி கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். 1802ம் ஆண்டு ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து கண்டி ராஜ்யத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போர்தொடுத்தர்கள். அந்த யுத்தத்தில் மலே இனத்தவரும் சோனக முஸ்லிம்களும் பங்கு கொண்டிருந்தார்கள். இதே போன்ற காரணங்கள்தான் தான் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கும் காரணமாயிருந்தன.

சிங்களவர்களுக்கு எதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் முக்கிய காரணத்துக்கு உரியவர்களாக இருந்துள்ளனர். 1915 முஸ்லிம் சிங்கள மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்தான் சிங்கள எழுட்சிக்கு அடிப்படையாகவும் அமைந்தது. பெரும்பான்மை சிங்களவர்களை ஆத்திரமூட்டச் செய்தது. அதே போல் சிங்களவர்களை சீண்டினால் அது முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தையும் அந்த கலவரத்தின் மூலம் முஸ்லிம்கள் கற்றுக் கொண்டார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -