கட்சிபேதங்களை மறந்து றஸூல் தோட்ட காணியை மீட்க முன்வாருங்கள்- எம்.டி.சபீக்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள ரசூல் தோட்ட தனியார் காணியினை மக்கள் 50 வருடகாலமாக விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் இக் காணி சுமார் 64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பழமை வாய்ந்த காணியாகும் இது உரிய மக்களுக்கே சென்றடைய வேண்டும் இதனை அரசு அண்மைக் காலங்களில் கையகப்படுத்த வேண்டிய நிலை அங்கு பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது இக்காணிக்கான உரிமம் பெற்றவர்கள் எமது மக்களே இது அவர்களுக்காக வழங்கப்படவேண்டும் .

அவர்களின் பராமரிப்பிலேயே தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளு ம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இக்காணியை மீட்டெடுக்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதங்களை மறந்து முன்வருமாறு முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.டி.சபீக் தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

றஸூல் தோட்ட காணியில் எமது மக்கள் விவசாய நடவடிக்கைக்காக தற்போது அண்ணளவாக 42 ஏக்கர் பரப்பில் தமது அன்றாட ஜீவனாம்சத்துக்கான தொழிலாக வெங்காயம்,கத்தரி,மிளகாய் உட்பட பல்வேறு பயிர்ச்செய்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 இவ்வாறிருக்க இக்காணிக்குள் அத்துமீறி நில அளவையில் அரச தரப்பினர்கள் தங்களுக்கு வசமாக்கிக் கொள்ள வந்தமையும் இதனால் மக்கள் வாய்தகறாரில் பொலிஸாருடன் பதற்ற நிலை தோன்றியமையும் ஏற்பட்டது இக்காணிக்கான சில பகுதிகள் உல்லாச நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

 இது எமது மக்களுக்கே இவ் நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் மேலும் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.டி.சபீக் தெரிவித்துள்ளார்.இக்காணியை அரசு கையகப்படுத்துவதற்கும் வரத்தமாணி மூலமாக அறிவுப்புச் செய்யப்படுவதற்கும் காத்திருக்கின்றமையும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

 இதனை தடுத்து உரியவர்களுக்கு வழங்க எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் அக்கறை காட்டவேண்டும்.பழமை வாய்ந்த இவ்வாறான காணிகள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள் சமாதானமான சூழ்நிலையில் வாழும் நிம்மதியான தருணத்தை இவ்நல்லாட்சி அரசு ஏற்படுத்துவதற்கு துணைபோக வேண்டுமெனவும் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -