ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுப் பொருட்கள் கையளிப்பு



முகம்மட் சஜீ-
காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘குபா வெற்றிக்கிண்ண’ பரிசளிப்பு விழா மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியெதுக்கீட்டில் இருந்து குபா விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். அத்துடன், குபா வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற குபா மற்றும் விக்டரி அணிகளுக்கான கிண்ணத்தை பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -