தமிழக மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைப் பற்றி ஃபேஸ்புக்கில் தரக்குறைவாக எழுதியதாகக் கூறி ஒருவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது.படத்தின் காப்புரிமை RUN SANKAR/AFP/GETTY IMAGES
அமைச்சர் ஜெயக்குமாரைப் பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் 'Satheesh Kumar' என்ற ஃபேஸ்புக் கணக்கில் இருந்து தரக்குறைவாகவும் அவதூறாகவும் தொடர்ந்து எழுதப்பட்டுவருவதாக அக்பர் பாஷா என்பவர் புகார் கொடுத்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
இந்தப் புகாரையடுத்து, அந்தக் கணக்கில் இயங்கிவந்த சதீஸ் குமார் என்பவரை மத்திய குற்றப் பிரிவு சைபர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த திருவள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இவர், ஜெயக்குமார் குறித்து என்ன எழுதினார் என்பது வெளியிடப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -