மட்டக்களப்பில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதாக ராபிதா அமைப்பு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை 22.09.2017 அன்று ஓட்டமாவடி மாஞ்சோலை, ஹிழ்ரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்தில் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு பொது அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.

சமகால முஸ்லிம் உலகில் எதிர்நோக்கப்படும் விவகாரங்கள், இஸ்லாமிய கொள்கை விளக்கங்கள், சகவாழ்வும் பண்பாட்டு விழுமியங்களும் உள்ளிட்ட இன்னும் பல சமகால விவகாரங்கள் இந்த எழுச்சி மாநாட்டில் எடுத்தாளப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -