மேல் மாகாண பஸ் நடத்துனர்கள் மிகுதிப் பணம் வழங்காவிட்டால் முறையிட இலக்கம் அறிமுகம்

ஐ. ஏ. காதிர் கான்-

மேல் மாகாணத்திற்குட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான நிகழ்வுகள் இடம்பெற்றால், இது தொடர்பில் உடனடியாக பயணிகள் முறைப்பாடு செய்ய முடியும் என்று, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமிருப்பதால், இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, பயணிகளுக்கு மிகச் சிறந்த போக்குவரத்துச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்துள்ளார். 

சில தனியார் பஸ் நடத்துனர்கள், பயணிகளுக்கு டிக்கட் வழங்குவதில்லை என்றும், டிக்கட் வழங்கினாலும் சில நடத்துனர்கள் மீதி சில்லரைக் காசுகளை சரியாக வழங்குவதில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சில்லரைக் காசுகளைக் கேட்டால், ஏசி முகத்தில் எறிந்து விழுவதாகவும், இதனால் பயணிகள் பெரும் இன்னல்களுக்கும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் நடத்துனர்கள் தொடர்பிலோ அல்லது தனியார் பஸ்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, இது குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அதிகார சபையின் 011 55 59 595 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

தனியார் பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளுக்கும் கட்டாயம் டிக்கட் மற்றும் மிகுதிப் பணம் வழங்கப்படவேண்டும் என்றும், இவ்வாறு வழங்கப்படாதுவிடத்து, அது சட்டத்தில் பாரிய குற்றம் என்பதுடன், தண்டனை வழங்கப்படுவதற்கான அதிகாரம், அதிகார சபைக்கு இருப்பதாகவும் சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -