இரண்டரை வருடங்களில் ஊழல் செய்ததை தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை..

ரு கட்சிகள் இணைந்து இணக்கப்பாட்டு அரசியலின் அடிப்படையில் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதன்மூலம் நன்மைகளை விட தீமைகளே அதிகம் இலங்கை நாடு பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ தெரவித்தார்.

யார் என்ன சொன்னாலும் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டரை வருடங்களும் மிகவும் வெற்றிகரமாகஅமைந்துள்ளதென ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா vision 2025 என்ற கொள்கையை பண்டாரநாயக்க சர்வதேசஞாபகார்த்த மண்டபத்தில் வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கூறியது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினாஎழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

தற்போது இலங்கையின் இரு பெரும் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன. இதன்ஆரம்பத்தில் எதுவித தடைக்களுமின்றி அரசை கொண்டு செல்வார்கள் என நம்பப்பட்டது. இருந்த போதிலும்தற்போதைய அரசுக்கு இரு பெரும் கட்சிகளுக்கிடையில் தோன்றும் முரண்பாடுகளை களையவே நேரம்சரியாகவுள்ளது. மக்கள் இரு கட்சிகள் இணைந்த இணக்கப்பாட்டு அரசியல் மூலம் நன்மை கிட்டும் என நம்பிய போதும்அவர்களுக்கு அது சாபமாகவே உள்ளது.

இதனை தெளிவாக விளங்க அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்திய விடயம்போதுமாகும். அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்தியதன் மூலம் செலவுகளை குறைத்தல், அமைச்சர்களைகட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற பல நல்ல விடயங்கள் உள்ளடங்கியுள்ளமை மறுக்க முடியாத உண்மை. அரசியலமைப்பில் அமைச்சர்களின் எண்ணிகையை மட்டுப்படுத்திய இவ்வரசு தேசிய அரசாங்கம் என்ற போர்வையில்அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகிரித்து, தான் கொண்டு வந்த மாற்றம் தனக்கில்லை, மற்றவர்களுக்கே எனபறை சாட்டிச் சென்றுள்ளது. இதுவெல்லாம் தேசிய அரசாங்கம் என்றதன் மூலம் கிடைக்கப்பெற்ற தீமைகள்.

இந்த நல்லாட்சி அரசானது தங்களது ஆட்சிக் காலத்தின் அரைப்பங்கை நிறைவு செய்துவிட்டது. உருப்படியாக என்னசெய்துள்ளார்கள் என ஒன்றையாவது இவர்களால் கோடிட்டுக் காட்ட முடியுமா? மக்கள் ஆணை தந்த காலத்துக்குள்உருப்படியாக எதனையும் செய்ய இயலாதவர்கள் அடுத்த ஆட்சிக் காலத்தையும் எங்களிடம் தாருங்கள் என vision 2025 என்ற திட்டத்தின் மூலம் கோரியுள்ளனர். உங்கள் திட்டங்களை இந்த ஆட்சிக் காலத்துக்குள் மட்டிடுவதுபொருத்தமானது. அதனை சரி வர செய்தால் மக்கள் தானாகவே ஆட்சியை தூக்கி கையில் தருவார்கள்.

அடுத்த ஆட்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினர் கைப்பற்றக் கூடிய சாதகமான நிலமைஉள்ளது. இந்த அரசானது தேர்தலை கண்டு பேயைக் கண்டு விரண்டோடுவது போல் அஞ்சுவதே இதற்கான பெரும்சான்றாகும். இல்லை.. இன்னுமொரு கட்சி கைப்பற்றுகிறது என வைத்துக்கொள்வோம்.அவர்கள் உங்கள் திட்டங்களைதொடர்வதை விரும்பவில்லை. அப்போது நீங்கள் செய்த திட்டத்தை இடை நடுவில் கைவிட்டால் என்னவாகும். உங்கள்ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த அத்தனையும் வீணாய் போய்விடுமே என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -