ஆறுபாடசாலைகளுக்கான குழாய்நீர் வினியோகம்



ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் ஆறுபாடசாலைகளுக்கான குழாய்நீர் வினியோகத்திட்டம் 19.09.2017 ஆரம்பிக்கப்பட்டது.

வேள்ட் விஷன் நிறுவனம் இத்திட்டத்திற்கான நிதியினை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலயத்தில் அப்பாடசாலை அதிபர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில்

வலயக் கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி வேள்ட் விஷன் கிரான் பிராந்திய அபிவிருத்தித் திட்ட முகாமையாளர் ஹிந்துறோஹாஸ், சுகாதாரம் மற்றும் போஷாக்குத்திட்ட அதிகாரி ரீ. றொசாந்தன் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சந்திவெளி- சித்தி விநாயகர் வித்தியாயலம், கனிஷ்ட வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை ராம கிருஸ்ண மிஷன் பாடசாலை, கோரகல்லிமடு ரமண மகரிஷி , கிரான் மத்திய கல்லூரி மற்றும் விவேகானந்தா வித்தியாயலம் ஆகிய பாடசாலைகளுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டது.



இப்பிரதேசத்து நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என சுகாதாரத்துறை அதிகாரிகளது அறிக்கையில் தெரிக்கப்பட்டதையடுத்து பாடசாலை மாணவர்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனைக் கவனத்திற்கொண்டு குழாய்நீர் இணைப்பினை வழங்க வேள்ட் விஷன் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -