மீனோடைக்கட்டு நிருபர்-
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் 2015/2016 ஆண்டுகளில் பிராந்தியங்கள் கீழ் உள்ள சுகாதாரப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்குமான சிறந்த செயல்திறன் விருது வழங்கும் விழா 2017.09.16 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகேவும், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எசி.எம். அன்ஸார், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரு தற்போதைய கிழக்கு மாகாண வீதியமைச்சின் செயலாளர் கருகாகரன் உள்ளிட்டோர்களுடன் சுகாதார அமைச்சின் முக்கிய உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு 180 ற்கும் மேற்பட்ட அலுவலர்களின் செயல்திறனுக்கு சிறந்த விருதுகளும் கெளரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் சிறந்த செயலாளராக செயலாற்றிய முன்னைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் காருனாகரனுக்கு பொண்ணாடை போர்த்தி கெளரவித்தார்.