கமு/சாஹிரா தாய்க்கு சர்வதேச ரீதியில் மற்றுமோர் மகுடம்- தென்கொரியா பயனம்

எஸ்.அஷ்ரப்கான்-

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இளம் புத்தாக்குனர் கண்காட்சி போட்டியில் கலந்து கொள்வதற்காக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை சார்பாக முதற்தடவையாக கலந்து கொள்ளும் தகைமையை தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் எஸ். அஜாத் முகம்மத் பெற்றுக் கொண்டுள்ளார்.

சர்வதேச கண்காட்சி நிகழ்வொன்றில் சாஹிரா தேசிய பாடசாலை சார்பாக மாணவன் ஒருவன் மூலம் பெருமையை பாடசாலை பெற்றுக் கொள்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.

இளம் புத்தாக்குனர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம்மாணவனை வாழ்த்தி உத்தியோகபூர்வமாக வழியனுப்பும் நிகழ்வு நேற்று 06. 08. 2017 ஞாயிறு பாடசாலையின் அதிபர் எம். எஸ். முகம்மதின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு மாணவனுக்குத் தேவையான பொருட்களை சங்கத்தின் சார்பில் ஏ.எம்.ஜெலீல், எம்.சி.எம்.சி.றிழா ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாணவனின் பெற்றோர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு அனைவரினதும் பங்களிப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -