ஷேகுத் தப்லீக் மௌலவி எம்.பி.எம். அலியார் ஹஸரதின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும். முன்னால் அமைச்சர் அதா உல்லாஹ்


ஷேகுத் தப்லீக் மௌலவி எம்.பி.எம். அலியார் ஹஸரதின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
முன்னால் அமைச்சர் அதா உல்லாஹ்

சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் கண்ணியத்திற்குரிய அமீரும், தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகராகவும், மூத்த உலமா சங்கைக்குரிய ஷேகுத் தப்லீக் மௌலவி எம்.பி.எம். அலியார் ஹஸரதின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். என்று தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சருமான கௌரவ அல்-ஹாஜ் ALM அதா உல்லாஹ் அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கையிலே சம்மாந்துறையின் மூத்த உலமாவாகவும், தனது வாழ்நாளை இஸ்லாமிய மார்க்கத்திற்காகவும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்த அற்புத மனிதரான ஹஸரத்திடம் கல்வி கற்று நுற்றுக்கணக்கான மௌலவிமார்களும், ஹாபிழ்களும் வெளியேறி இலங்கையின் அனைத்து பிரதேசங்களும் மார்க்க்க் கல்வியினை புகட்டிவருகின்றதோடு, தப்லீக் ஜமாஅத் ஊடாகவும் அவர் ஆற்றிய சன்மார்க்கப் பணிகளுக்கு அப்பால், பரந்தளவில் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார்.

கண்ணியத்துக்குரிய அலியார் ஹஸரத் காலமான செய்தியை அறிந்தவுடன் கவலையடைந்தேன்.

எல்லோருடனும் அன்பாகப் பேசி, சாந்தமாக அளவளாவி அனைவரினதும், மனத்தையும் கவர்ந்துவிடும் தனிச்சக்தி இவர்களிடம் உள்ளது.
இஸ்லாமிய மார்க்க அறிவில் ஆழ்ந்த புலமை மிக்க இவர்கள் தமது மாணவர்களைத் தேர்ந்த அறிஞர்களாகவும் உயர்ந்த ஒழுக்க சீலர்களாகவும் ஆக்குவதில் மகத்தான பணி செய்து கொண்டிருந்தார்.
இவரின் மறைவு சம்மாந்துறை வாழ் மக்களும், முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை அளப்பிரார்த்திப்பதோடு, அன்னரின் பிரிவினால் துயருத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உலமாக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -