விடுதிப் பிரச்சினை காரணமாக கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் இந்த தீர்மானம் அமுலாகியுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எல் ஜவ்ஃபர் சாதிக் அறித்துள்ளார்.
அதற்கமைய, இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வௌியேற வேண்டும் எனவும் அறைகளுக்கான சாவிகளை உரிய விடுதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் பெஸ்ட்
