அன்பு மலர்களே
நம்பி எழுதுங்கள்
ஏ எல் எக்ஸாம் -விதி
மேயும் எக்ஸாம்.
பாலர் வகுப்புடன்
வந்த பயணங்கள்
ஏ. எல். எழுத -இனி
பாதை மாறும்
பன்னிரண்டு வருடம்
எண்ணிய கனவு
இறைவனின் அருளால்
இனிதே முடியும்- ஏ. எல். எக்ஸாம்
வாழ்க்கையை மாற்றும்
வரலாற்றைத் திருப்பும்
பாதைகள் பிரிய
பயணங்கள் தொடரும் - ஏ.எல். எக்ஸாம்
ஏ எல் எக்ஸாம் -விதி
மேயும் எக்ஸாம்
ஏ.எல். என்னும் பரீட்சை எழுதும்
இளைய நெஞ்சங்களே
தாயின் தந்தை பிரார்த்தனை உங்கள்
வாழ்வை வளமாக்கும்.
நாடும் வீடும் உங்களை நம்பி
நாடி இருக்குது தங்கை தம்பி
நாடும் வீடும் உங்களை நம்பி
நாடி இருக்குது தங்கை தம்பி
எழுதிடும் பரீட்சைக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
இரவு பகலாய் விழித்துப் படித்த
எல்லா தியாகங்களும்
நிறைவு கொண்ட முடிவைத் தந்திட
இறைவன் உதவி செய்வான்.
இந்த சோதனை முடிந்ததன் பின்னும்
சொந்த வாழ்வில் சோதனை பல வரும்
இந்த சோதனை முடிந்ததன் பின்னும்
சொந்த வாழ்வில் சோதனை பல வரும்
சிந்தித்து செயல் பட்டால்
எந்த நாளும் நல் வாழ்வே.