அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி அனுதாபம்.

அனா-

ம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இன்று (19.08.2017) சனிக்கிழமை வபாத்தான இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சர் அமீர் அலி விடுத்துள்ள அனுதாப செய்திலயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து கருத்து தெரித்துள்ளதாவது.

அலியார் ஹஸரத்தின் மறைவு இலங்கை முஸ்லீம்களுக்கு மாத்திரம் அல்ல நாட்டில் உள்ள அனைவருக்கும் பேரிழப்பாகும் ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்பட்ட அலியார் ஹஸரத் 'மிக நீண்ட காலமாக மார்க்கப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். முஸ்லிம் சமூகத்துக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ள ஹஸரத்தின் மறைவு செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்.

சம்மாந்துறை மண்ணை சமூக ரீதியாகவும் சன்மார்க்க ரீதியாகவும் தலைநிமிரச் செய்ததில் அலியார் ஹஸரத்துக்கு பெரும் பங்குள்ளது. குறிப்பாக தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கிழக்கு மாகாணத்தில் தப்லீக் ஜமாஅத் வளர்ச்சியடைய பெரும்பாடுபட்ட ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என்றே நினைக்கிறேன்.

அவரது இழப்பால் கவலையடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொளவதோடு எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக எனப் பிராத்திக்கின்றேன் என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -