அதில் தலைவரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உள்ள தாமதத்துக்கான காரணத்தினையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியினால் செய்ய முடியாத பல வேலைகளை செய்யக்கூடிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பற்றியும், அதனால் பல மில்லியன் ரூபாய்களில் அபிவிருத்தி பணிகள் அட்டாளைச்சேனையில் நடைபெறுவது பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.
எனது கட்டுரையின் உண்மைத் தன்மையினை புறக்கணித்துவிட்டு, உங்கள் ஊருக்கு வர இருக்கின்ற தேசியப்பட்டியலை நான் தடுக்க முற்படுவது போன்று அபாண்டமான சொற்பிரயோகங்களுடன் பதிவிட்டு உள்ளீர்கள்.
இது உங்களின் புரிதலில் உள்ள குறைபாடா? அல்லது அமைச்சர் நசீர் மீது உள்ள சகோதர பனிப்போரின் வெளிப்பாடா? என்று தெரியவில்லை.
ஆனாலும் உங்களது இந்த பதிவானது நாளாந்தம் முஸ்லிம் காங்கிரசையும், அதன் தலைவரையும் விமர்சிக்கின்றவர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று உள்ளது.
அதாவது அட்டளைச்சேனை தேசிய பட்டியலை வைத்து அரசியல் விமர்சனம் செய்பவர்களுக்கு நீங்களே களம் அமைத்து கொடுத்துள்ளீர்கள்.
அப்படியானால் இவ்வளவு காலமும் நீங்கள் எமது தேசிய தலைவரை புகழ்ந்து எழுதிய எழுத்துக்களை நீங்களே சைவரால் பெருக்கி உள்ளீர்களா?
முஸ்லிம் காங்கிரசின் வரவின் மூலம் முஸ்லிம்களிடம் இருந்த பிரதேசவாதம் தகர்த்தெறியப்பட்டது. ஆனால் உங்களது இந்த பதிவில் தங்களது ஊருக்கான உரிமையினை கோருகிறோம் என்ற போர்வையில், தீய பிரதேசவாதத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
உண்மையான ஒரு சமூகப்பற்று உள்ளவனிடம் எந்த சந்தர்ப்பத்திலும் பிரதேசவாதம் இருக்க முடியாது.
பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களினால் முஸ்லிம் காங்கிரசிலிருந்து சேகு இஸ்ஸதீன் வெளியேற்றப்பட்ட போது, ஆத்திரமடைந்த சேகு, கலியோடை பாலத்தை எல்லையாக குறிப்பிட்டு முஸ்லிம் காங்கிரசினை அழிப்பதற்காக கொடிய பிரதேசவாதத்தினை கையிலெடுத்தார். ஆனால் மக்கள் சேகு பின்னால் செல்லவில்லை.
அதே சேகு பாணியில் நீங்களும் கலியோடை பாலத்தை எல்லையாக குறிப்பிட்டு சேகுவை பின்பற்றிய கொடிய பிரதேசவாதத்தினை இந்த பதிவில் விதைத்துல்லீர்கள்.
அத்துடன் வரலாற்றை இளைய சமுதாயத்தினர்களுக்கு பிழையாக கூற முற்படவேண்டாம். கலியோடை பாலம் தொடக்கம் பொத்துவில் வரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அக்கரைப்பற்று அதாஉல்லாஹ்வுக்கும், பொத்துவில் அசீசுக்கும், அட்டாளைச்சேனை ரிஸ்வி சின்னலெப்வைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது நினைவில்லையா?
அத்துடன் எனது கட்டுரையினை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை. அதனால்தான் ஆஸ்பத்திரி வீதியை அகற்றியது பற்றி கூறியுள்ளீர்கள். எனது கட்டுரையில் ஆஸ்பத்திரி வீதி பற்றி எந்த இடத்தில் குறிப்பிட்டு உள்ளேன் என்று கூறமுடியுமா?
இதன் மூலம் ஒன்றை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் நீங்கள் நன்றாக குழம்பி போய் உள்ளீர்கள் என்பது மட்டும் உண்மை.
விவாதத்துக்காக எதனையும் பேசலாம். ஆனால் அது நடைமுறைக்கு பொருந்துமா என்று அனுபவமுள்ள நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.
உங்களது பிரச்சனைகளை அதியுயர் பீடத்தில் பேசலாம். அல்லது அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பொது கூட்ட மேடையில் ஏறி உங்கள் ஆதங்கத்தினை கூறியிருக்கலாம்.
ஆனால் இவைகளை எல்லாம் விட்டுவிட்டு மாற்று கட்சிகளின் எடுபுடிகளுக்கு விமர்சனம் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்த உங்களது பதிவு கண்டிக்கத்தக்கது.
எது எப்படி இருப்பினும் அட்டாளைச்சேனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இடமில்லை.
அது தலைவரின் வாக்குறுதி. நிச்சயமாக அது அட்டாளைச்சேனைக்கு கிடைக்கும். அது கிடைத்த பின்புதான் அதை வைத்து அரசியல் காய் நகர்த்துபவர்கள் தலைகுனிவார்கள் என்பது மட்டும் உண்மை.
நன்றி
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது