கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றது..!

எம்.ஜே.எம்.சஜீத்-
றக்காமம் பிரதேச செயலகத்தினால் கற்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதும், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் தெரிவிக்கப்படும் விடையம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று(13)தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று(13) கூட்டத்தின் இணைத்தலைவர்களான எஸ்.எல்.மன்சூர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் இணைத்தலைவரான பொறியியலாளர் எஸ்.எல் மன்சூரினால் இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கற்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்குப் பொதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பில் சபையில் பிரஷ்தாபித்தார்.

அண்மைக்காலமாக வழங்கப்பட்டு வரும் இப்போஷாக்கு பொதியிலுள்ள உணவுப் பொருட்கள் பழுதடைந்தும், துர்நாற்றம் மணமும் கொண்ட தரமற்ற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக உள்ளதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர் என்றார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் கருத்து தெரிக்கையில்,

கற்பிணிதாய்மார்களுக்கு முறைகேடான முறையில் வழங்கப்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

பிரதேச செயலகத்தின் இப்போஷாக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் கேள்வி சபையில் இப்பிரதேசத்தின் பிரதேச வைத்திய அதிகாரியையும் உள்ளீர்ப்க்கப்பட வேண்டும். இம்முறைகேடுகள் தெர்பில் உடன் விசாரணை நடத்தி முறைகேடுகள் இடம்பெற்றிருப்பின் தகுதி, தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன் இவ்விடயம் கூட்டத் தீர்மானமாகவும் இது நிறைவேற்றப்பட்டது.

காணப்படுவதாகவும் அதனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிஉடன் ஆராய்ந்து பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். இக் அபிவிருத்தி கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர் கட்சி தலைவர் எம் எஸ் உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையின் உருப்பினர் மாஹிர் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -