ஹாபிழ்கள் மன்றம் நடாத்தும் கிழக்கு மாகாண ஹாபிழ்களுக்கான அல்குர்ஆன் மனனப் போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வு எதிர்வரும் 15.07.2017 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுளள்து என அம்மன்றம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஹாபிழ்கள் மன்றத்தினால், கிழக்குமாகாண ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களுக்கான மாவட்ட மட்டத்திலான அல்குர்ஆன் மனனப் போட்டிகள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
இந்நிலையிலேயே இதற்கான இறுதிப்போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தினை எட்டியிருக்கின்றன.
மேலும் இந்த இறுதிப் போட்டி நிகழ்வில் வெற்றிபெறும் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் செப்ரெம்பெர் மாதம் ஹாபிழ்கள் மன்றத்தினால் ஏறாவூரில் பிரம்மாண்டமாக நடாத்தப்படவிருக்கும் ஹாபிழ்கள் மாநாட்டின்போது வழங்கிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வு இடம்பெறும்போது கூடவே, ஏறாவூர் குல்லிய்யத்து தாரில் உலூம் அரபுக்கல்லூரி பழைய மாணவர்களுக்கான பட்டமளிப்பும், கௌரவிப்பும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
