ஒரு தொகை சந்தன கட்டைகளை கடத்திய நபர்கள் கைது
க.கிஷாந்தன்-

வா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான முறையில் முச்சக்க ரவண்டியொன்றில் ஒரு தொகை சந்தன கட்டைகளை கடத்திய நபர்கள் இருவரை 07.07.2017 அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினை மையமாகக் கொண்டு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினையடுத்து ஊவா பரணகம ஹிம்பிலியகஹமடித்த பகுதியில் வைத்து குறித்த வாகனத்தையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் ஒரு இலட்சம் ரூபாய்கள் பெறுமதியுடைய சந்தன மரக்குற்றிகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவரையே இதன்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சந்தன குற்றிகளுடன் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -