பாறுக் ஷிஹான்-
யாழ் கிளிநொச்சி மக்களின் நலனுக்காக எந்தவொரு அமைச்சரையும் எப்போது கண்டாலும் ஏதாவது ஒன்றை கேட்டு அதனை நிறைவேற்ற முயற்சிப்பவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆவார் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சின் அணுசரணையில் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று(30) சுன்னாகம் ஏழாலை தெற்கு பகுதியில் பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அமைச்சர் தனது கருத்தில்
எந்த அமைச்சரையும் எப்போது எங்கு கண்டாலும் அவர்களுடன் உரையாடி மக்கள் நலத்திட்டங்களை எங்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தாருங்கள் என கேட்பவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்.
அவர் எமது மக்கள் தான் அதிகமாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் .அதை கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள் என உங்களுக்காக (யாழ் மக்களுக்காக) கேட்டுக்கொண்டே இருப்பார் .அவர் எப்போதும் உங்கள் தேவைக்காக ஏதாவது சேவை செய்யத்துடிப்பவர் .
என்னை பல தடவைகள் சந்தித்து உங்கள் அமைச்சின் கீழ் வரும் அபிவிருத்தி திட்டங்கள்இ எங்கள் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் இளம்தலைமுறையினரின் கைத்தொழில் முயற்சிக்கான வாய்ப்புக்கள் யுத்தத்தின் பின்னர் ஏராளமான பெண்தலைமைத்துவ குடும்பங்கள் குறித்தும் அப் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்கள் பிரதேச மாவட்ட மக்களின் நிலையை உணர்ந்து தரவேண்டும் என அடம்பிடித்துக்கேட்பார் என அங்கு கூறினார்.


