பரி வலம் பாகம்1.
வடபுல மக்களின் ஏக்கத்துக்கு விருந்தாக தேசிய காங்கிரஸின் தலைமை அதாவுல்லாஹ்வின் பரி வலம் அமையப்பெற்றமை சிறப்பாகும். கொடுங்கோல் அமைச்சரின் அதிகார விலங்குகளுக்குள் சிறைபிடிக்கப்பட்டு சிக்கித்தவிக்கும் மக்களின் விலங்குகளை உடைத்தெறியும் வண்ணம் இவ்வலம் இடம் பெற்றது.
மேய்ப்பன் இருந்தும் இல்லாதது போல் ஏங்கித்தவிக்கும் மக்களுக்கு அதாவுல்லாஹ்வின் வருகை பெரும் ஆறுதலை அளித்தமை அவர்கள் ததும்பிய குரலில் அளித்த பேட்டிகளிலும், அவர்களுடன் அளவளாவுயதிலும் வெளிப்பட்டது. புத்தளம் எருக்கலம் பிட்டி பொத்துவில்லு பிரதேச மக்கள் மர்ஹூம் நூர்தீன் மசூரின் மரணத்தின் பிற்பாடு அவர்விட்டுச் சென்ற அதே இடத்தில் இருந்து அபிவிருத்தியில் ஒரு இஞ்சுயும் நகராமல் நிற்கின்றமை தெளிவானது.
கடந்த பத்துவருடங்களுக்கு மேலாகவும் முஸ்லிம் ஒருவர் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டும் அந்த பிரதேச மக்கள் அபிவிருத்தி, பொருளாதாரம், வாழ்வியல் அனைத்திலுமே பின் தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றமையைவிடக் கொடுமையான செயல் வேறு எதுவாகவும் இருக்கமுடியாது. வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் அமைச்சரின் கூஜா தூக்கிகள் தவிர எந்தப்பாமர மகனும் எந்தவித நலனையும் பெற்றதாக பெரும்பாலான மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
வீட்டுத்திட்டங்களில் தெளிவில்லை. வீதிகளைக் காணவில்லை. வெறும் வெற்றும் வெறிதான பாலை நிலத்தில் தம்மால் முடிந்தவற்றை அறுவடை செய்து வாழும் வடபுல மக்களின் நிலை கண்டு கண்கள் பனித்ததே அன்றி வேறொன்றில்லை. வடமாகாணத்தில் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் இம்மக்கள் மாகாண சபை அதிகாரத்தில் இருந்தும் விகிதாரசாரத்துக்கேற்ப அபிவிருத்தி பங்குகள் பிரிக்கப்படாமல் அல்லலுறுவதும் அலசப்பட்டது.
இவையனைத்தையும் வைத்து நோக்கும் போது கடந்த காலங்களில் வடக்கு அமைச்சர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதில் எவ்வளவு தூரம் சிரத்தை எடுத்திருக்கின்றார் என்பது வெள்ளிடைமலையாகின்றது. வெறுமனே தன்னை தேசிய தலைவராக்கிக் கொள்ள முனைந்திருக்கின்றாரே தவிர மக்களின் மனங்களில் இவர் இல்லை எனும் முடிவுக்கு இலகுவாக வந்துவிட முடியும்.
ஆகவேதான் எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸின் வடக்கு மக்களை நோக்கிய உதவிக்கரம் நீட்டும் வேலைத்திட்டம் தலைவர் அதாவுல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட இறைவனை பிரார்த்திப்போம்.
ஷிபான் BM
மருதமுனை.