பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்

டலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே தலைமுடி எரிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கானாஞ்சாவடியில் சாலையோரம் ஒரு பெண் தீக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த அவர்கள் பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சக்தி என்பதும், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் காரில் கடத்தி வந்து தமது தலையில் பெட்ரோல் ஊற்றி எரித்து தம்மை சாலையோரம் வீசிச் சென்றதாக போலீசாரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -