நாஸிறூன் -
இன்றைய இலங்கையின் இளைஞர் யுவதிகளின் மத்தியில் திறன் சார் தொழில் பற்றிய எண்ணக்கருவில் மாற்றம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டமானது நேற்று 25.07.2017 கொழும்பு பிஷப்ஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திறன் சார்ந்த தொழிற் சந்தை தொடர்பான பல நிறுவன தலைவர்கள் பங்கேற்றதோடு தொழிற்கல்வி மற்றும் திறன் சார்ந்த (இலகு பொறியியல், மோட்டார் வாகனத்துறை, கட்டுமானம், விருந்தோம்பலும் சுற்றுலாத்துறையும் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்ற தொழில் வாய்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வு குறும்படங்களும் இன்னும் இதர விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்ச்சி அமைச்சர் கெளரவ. சந்திம வீரக்கொடி பிரதம அதிதியாத கலந்து கொண்ட இந்நிகழ்வில் "எகட்ட | ஒன்றா" கருத் திட்டத்தின் www.skillupsrilanka.lk எனும் உத்தியோக பூர்வ இணைய தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.