நாட்டில் இன மதவாதத்தை தூண்டி சில குழுக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர் - வடிவேல் சுரேஷ்






க.கிஷாந்தன்-

ந்த நாட்டில் இன மதவாதத்தை தூண்டி சில குழுக்கள் குளிர்காய்ந்து வருகின்றனர். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இவர்கள் பேதங்களை உருவாக்கி பிளவுப்படுத்த வைப்பது இவர்கள் காணும் பகல் கனவாகும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் புதிய பிராந்திய காரியாலயத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் உள்ள தமிழ் மூஸ்லீம் மக்கள் ஒற்றுமையுடனே வாழ்கினறனர். இவர்கள் மத்தியில் அரசாங்கமோ அல்லது பாதுகாப்பு படையோ சரி இன மதவாதத்தை தூண்ட நினைத்தால் அது இடம்பெறாது.

கடந்த அரசாங்க காலத்தில் இனவாதத்தை தூண்டியமையினால் மஹிந்தவின் அரசை மக்கள் கவீழ்த்தனர். நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற வைக்க தமிழ் மக்கள், மூஸ்லீம் மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்று வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகின்றனர்.

இதனால் எமது பெருந்தோட்ட தொழிலாளர்களும் சுகாதார பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த வைத்தியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பின்புலமாக சில கட்சிகள் செயல்படுகின்றதாக அறிய முடிகின்றது.

இந்த நாட்டில் அரசாங்கத்தின் மீது அன்பு செலுத்தும் மலையக மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முதுகெழும்பாக செயல்படுகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை அரசாங்கம் நிறைவேற்றம் செய்ய வேண்டும்.

புத்திஜீவிகளான வைத்தியர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்பதை வழியுறுத்துகின்றோம். தொழிலாளர்கள் உழைத்து கட்டும் வரி பணத்தில் இலவச கல்வியை கற்கும் வைத்தியர்கள் பேராட்டங்களை கைவிட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் சரத்துகளை மீறி பெருந்தோட்ட நிர்வாகங்கள் செயல்படுவதனால் அடுத்து வரும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட மாட்டேன்.

கூட்டு உடன்படிக்கை சரத்துகள் தொடர்பில் ஆராயப்பட்டு வரும் நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் தோட்ட நிர்வாகங்கள் அதன் சட்ட விதிகளை மீறி வருகின்றது. இதனால் எமது தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 140 ரூபாய் கொடுப்பனவிலிருந்து ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் இருக்கின்றது.

இந்த செயல்பட்டினால் தொழிலாளர்கள் பாரிய சிக்கல்களுக்குள்ளாகியுள்ளனர். ஒன்றரை வருட காலமாக கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இடம்பெற்ற பொழுதும் நான் பொது செயலாளராக பதவி ஏற்று மூன்று மாதத்தில் இப்பிரச்ச்னைக்கு தீர்வு ஒன்று காண வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு முன்வைக்கப்பட்ட சட்ட விதிகளை உணர்ந்து கையொப்பம் இட்டேன்.

ஆனால் பெருந்தோட்ட நிர்வாகங்கள் இந்த சட்ட விதிகளை மீறி வருகின்றமையினால் எமது தொழிலாளர்கள் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகையால் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு தெரிவிக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -